இன்றைய ராசிபலன்:7-10-2025
இன்றைய ராசிபலன்:7-10-2025
மேஷம்
புதிய நட்பு வட்டாரம் உருவாகும். அங்கு தங்களுக்கு மதிப்புக் கூடும். தொழில்அதிபர்களுக்கு தங்கள் நிர்வாகத்திறன் கூடும். வேலையார்களிடம் பக்குவமாக வேலை வாங்குவீர்கள். திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்
ரிசபம்
தம்பதிகளுக்குகிடையே கருத்தொற்றுமை மேலோங்கும். பணவரவு நன்றாக இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். வெளியூரில் உள்ள தங்கள் குல தெய்வ பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
மிதுனம்
வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். அதன் மூலம் தங்களுக்கு ஆதாயம் உண்டு. வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். நீண்டகாலமாக இருந்து வந்த குடும்பப் பிரச்சினைகள் தீரும். காதலர்களுக்கு பொறுமை அவசியம். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்கவும்.
அதிர்ஷ்ட நிறம் நீலம்
கடகம்
பணவரவு சுமாராகத்தான் இருக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்களின் சொல்படி நடப்பது மிகுந்த நன்மை பயக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் ஊதா
சிம்மம்
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
கன்னி
சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். அண்டை வீட்டார் மூலம் சில நன்மைகள் உண்டாகும். அரசியலில் செல்வாக்கு உயரும். அலைச்சல் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம் பச்சை
துலாம்
தூர தேச பயணத்திற்கு ஆயத்தமாவீர்கள். கடன் பிரச்சினை ஓயும். உடல் நலத்தில் சிரமமில்லாமல் இருக்கும். பெற்றோரின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது. வியாபாரிகளுக்கு கடன் பிரச்சினை தீரும். பெரியவர்களின் ஆலோசனைக்கு மதிப்புக் கொடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம் நீலம்
விருச்சிகம்
வீட்டில் நிம்மதி கிடைக்கும். பிரிந்த நண்பர்கள் மீண்டும் இணைவர். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிள்ளைகளால் நன்மைகள் விளையும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அநாவசியமாக மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்
மகரம்
தொழிலில் புதிய திட்டத்தை புகுத்துவீர்கள். திடீர் பணவரவு உண்டு. துணைவரால் உதவிகள் கிடைக்கும். சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர்கள் வந்து போவர். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர் மெச்சும்படி நடப்பர். தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் சாம்பல்
தனுசு
உடல் சோர்வு நீங்கும். பணவரவில் பிரச்சினை இல்லை. நண்பர்கள் உதவுவர். தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். சிக்கனத்தை கடைபிடிப்பீர்கள். சேமிக்க துவங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் நீலம்
கும்பம்
இன்று திட்டமிட்ட காரியம் நிறைவேறும். துணைவருடன் நல்ல புரிதல் உண்டாகும். பணவரவில் தாமதம் இல்லை. மன உளைச்சலிருந்து மீண்டுவிடுவீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம் பொன்வண்ணம்
மீனம்
வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைச்சுமை இருக்கும். சமாளிப்பீர்கள். மனஉறுதி அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். பிள்ளைகள் சாதனைப் படைப்பர். உணவு விசயத்தில் கவனம் தேவை. கூடுமானவரை வீட்டு உணவுகளை உண்பது நல்லது. மாணவர்கள் நன்கு படிப்பர்.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை