கரூர் கூட்ட நெரிசல்.. உயிரிழந்தவர்களுக்கு வடசென்னை மாவட்ட தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு வடசென்னை மாவட்ட தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தமிழக பாஜக மற்றும் அதிமுக, தவெக, தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.அதன் ஒருபகுதியாக வடசென்னை மாவட்டம் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உ.இ ரஹ்மான் பாஷா தலைமையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திருவெற்றிஊரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வடசென்னை மாவட்ட செயலாளர் முஹம்மத் இம்ரான் மற்றும் வடசென்னை மாவட்ட தலைவர் சையத் தமீம் மற்றும் தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலாஜி மற்றும் தென் சென்னை மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர் மற்றும் மற்ற நிர்வாகிகள் ஒன்று இணைந்து விஜய் பரப்பரை கூட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு 41 பேரு தமிழ் மாநில முஸ்லிம் லீக் சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.அப்போது மனித நேயமே மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும் மனிதனை நேசிக்க வேண்டும் மனித உறவுகளை பார்க்க வேண்டும் என்று அஞ்சலி செலுத்திய பின் தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர் .