புதிய சாலை அமைக்கும் பணி..எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார் !

Loading

வில்லியனூர் பாண்டியன் நகரில் ரூ. 75 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணிகளை பூமி பூஜை செய்து எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, வில்லியனூர் கூடப்பாக்கம் மெயின் ரோடு தொடங்கி பாண்டியன் நகர் மெயின் ரோடு மற்றும் 10 குறுக்கு வீதிகளுக்கு சாலை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் ரூபாய் 75 லட்சம் ஒதுக்கீடு பெற்று பொதுப்பணித் துறை சாலைகள் மற்றும் கட்டிடங்கள் வடக்கு பிரிவு மூலம் மேற்கொள்ளப்படும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை 10.30 மணிக்கு நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, புதிய தார் சாலை அமைக்கும் பணியை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இதில், பொதுப்பணித்துறை சாலைகள் மற்றும் கட்டிடங்கள் வடக்கு பிரிவு செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவிப் பொறியாளர் சீனுவாசராம், இளநிலைப் பொறியாளர் குலோத்துங்கன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மிலிட்டரி முருகன், கிருஷ்ணமூர்த்தி, ராம்ரோப், சுப்புராயிலு, பிரவீன், பிரதீப், கார்த்தி, சரவணன், சிலம்பரசன், கஸ்தூரி, அமுதா, தீபா, அபிராமி, சிவா, சரண்யா, திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் செல்வநாதன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், ஆதிதிராவிடர் அணி தலைவர் பழனிசாமி, தொமுச தலைவர் அங்காளன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பழங்குடியின தலைவர் ஏகாம்பரம், துணை அமைப்பாளர்கள் சரவணன், காசிநாதன், தேசிகன், காளி, தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ஏழுமலை, கிளைக் கழக நிர்வாகிகள் சபரி, ராஜி, ஜனா, திலகர், தக்ஷிணாமூர்த்தி, தேவநாதன், சேகர், கார்த்திகேயன், கலைமணி, பாலகுரு, கமால்பாஷா, ராமஜெயம், ராஜேந்திரன், முத்து, அருண், அஞ்சாபுலி, நடராஜன், ரகு, கோதண்டம், சூர்யா, அசார், கோபி, மூர்த்தி,சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares