ரூ. 5 ஆயிரத்து 490 கோடியே 80 லட்சம் வங்கி கடனுதவி.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெருமிதம்!
கடந்த 4 ½ ஆண்டுகளில், 66,018 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-இந்தியாவிலேயே முதல் முதலாக வருகிற 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு – கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. அக்டோபர் 9 ஆம் தேதி முதல்-அமைச்சர் மாநாட்டினை தொங்கி வைக்க உள்ளார்
இந்த மாநாட்டில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், மத்திய அரசின் 10 துறைகளும், 10 மாநிலங்களின் அரசுத் துறைகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் 15 துறைகளும் பங்குபெற உள்ளனர். 1000 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளுடன், 315 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.
முதல்-அமைச்சர் பொறுபேற்ற பின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை ஊக்குவிக்க தலைமை செயல் அலுவலர் பதவியுடன் 70 க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து ஸ்டார்ட் அப் உருவாக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், இது வரை கடந்த 4 ஆண்டுகளில் 43 எஸ்.சி. / எஸ்.டி. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உட்பட 212 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், ரூ. 79 கோடியே 49 லட்சம் தமிழக அரசு முதலீடு செய்துள்ளது. அரசு முதலீடுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்களில் 68 நிறுவனங்கள் ரூ. 554 கோடியே 49 லட்சம் மதிப்பில் வெளி முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றுள்ளது,.
தமிழ்நாட்டில் ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழலை உருவாகியதால் 2021 இல் 2032 ஆக இருந்த ஸ்டார்அப் நிறுவனங்களின் பதிவு தற்போது 12,171 ஆக உயர்ந்துள்ளது.
கழக அரசு பொறுப்பேற்ற 4 ½ ஆண்டுகளில் 13 மாவட்டங்களில் 697.81 ஏக்கர் பரப்பளவில் ரூ. 386 கோடியே 76 லட்சம் மதிப்பில் 17 புதிய தொழிற்பேட்டைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் 543.31 ஏக்கர் பரப்பளவில் ரூ. 419 கோடியே 58 லட்சம் மதிப்பில் 16 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் வெற்றிகரமான திட்டங்களால், கடந்த 4 ½ ஆண்டுகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 133 கோடியே 26 லட்சம்
மானியத்துடன், ரூ. 5 ஆயிரத்து 490 கோடியே 80 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 66,018 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.