போதி தர்மருக்கு சிலை அமைக்க வேண்டும் ..உலக கராத்தே மாஸ்டர் சங்கம் வலியுறுத்தல்..கண்டுகொள்ளுமா மத்திய,மாநில அரசு?

Loading

காஞ்சிபுரத்தில் போதிதர்மரின் சிலையை வைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் முன்வந்து அவரது புகழை எடுத்து சொல்ல வேண்டும் என்று உலக கராத்தே மாஸ்டர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

உலக கராத்தே மாஸ்டர் சங்கத்தின் தலைவர் பாலமுருகன் சென்னையில் செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:உலக கராத்தே மாஸ்டர் சங்கத்தின் மூலம் இந்தியாவில் லட்சக்கணக்கான பேருக்கு தற்காப்பு கலை அளிக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் ஏராளமான மாணவ மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். 2017 முதல் உலக கராத்தே மாஸ்டர் சங்கம் துவக்கப்பட்டு இன்றுவரை லட்சக்கணக்கான விற்கு தங்கள் தற்காப்புக் கலையை வழங்கி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகப்பெரிய பொருளாதாரம் அடைய முக்கிய காரணமாக இருந்தவர் போதிதர்மர் என்றும் அவருடைய போதனைகளைப் பின்பற்றி தற்காப்பு கலையை சீனா வளர்த்து வருகிறது ஒன்பது ஆண்டுகள் தவம் இருந்து தற்காப்பு கலையை முழுமையாக கற்பித்து சீன நாட்டுக்கு மிகப்பெரிய உதவியை செய்தவர் போதிதர்மர்.அவரின் போதனைகளை மேகொண்டு கிழக்கு ஆசி நாடுகளான சீனா ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் முன்னேறி வருகிறது.

அதற்கு மூல காரணம் போதிதர்மர் அளித்த அந்த தற்காப்பு கலை தான். அந்த தற்காப்பு கலையை இந்தியாவில் முழுமையாக தற்போது நமது சங்கம் செய்து வருகிறது. உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற பல தற்காப்பு போட்டிகளை நடத்தி உலக கராத்தே மாஸ்டர் சங்கம் பின்பற்றி வருகிறது. பல ஆயிரக்கணக்கான கராத்தே மாஸ்டர்கள் தங்கள் பணியை சேவையாக செய்து வருகின்றனர். மாணவர்களுக்கு தற்காப்புகலைகளை அழிப்பதன் மூலம் மிகப்பெரிய ஒரு தூண்டுதலாக இருக்கிறது.

காஞ்சிபுரத்தில் பிறந்த போதிதர்மரின் தத்துவங்களை நமது இந்தியாவில் கடைபிடித்து தற்காப்பு கலையை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் உலக கராத்தே சங்கம் செயல்பட்டு வருகிறது, ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் இந்த தற்காப்பு கலையை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சேவையை செய்து வருகிறது லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த தற்காப்புக் கலையை தாங்கள் செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் ஒரு கோடி பேருக்கு இலவசமாக தற்காப்புக் கலையை கற்று தர உள்ளதாகவும் பாலமுருகன் தெரிவித்தார், அதுமட்டுமில்லாமல் பல்வேறு தலைவர்களுக்கு சிலை உள்ளது போல் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் போதிதர்மன் பிறந்த மண்ணில் அவருக்கு ஒரு சிலை அமைக்க வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை முன் வைப்பதாக அவர் கூறினார்.

இந்த போதிதர்மரின் சிலையை வைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் முன்வந்து அவரது புகழை எடுத்து சொல்ல வேண்டும் என்று உலக கராத்தே மாஸ்டர் சங்கம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். அவருடைய சிலை வைப்பதால் இந்தியாவில் அவருடைய போதனைகள் மேலும் அடித்தட்டு மக்கள் முதல் அனைவருக்கும் சென்றடையும் என்றும் அவர் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

0Shares