ராஜீவ் காந்தி பிறந்தநாள்..டெல்லியில் மரியாதை செய்த தமிழக காங்கிரஸ் தலைவர்கள்!
ராஜீவ் காந்தியின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் டெல்லி ராஜ்காட் வீர்பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்திமேற்கொண்ட தொண்டு, அறிவியல், தொழில்நுட்பம், கல்வி மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் ஏற்படுத்திய பெரும் மாற்றங்கள் என்றும் மறக்க முடியாதவை. இளைஞர்களுக்கு அளித்த ஊக்கமும், நாட்டின் வளர்ச்சிக்கு அவர் கொண்டிருந்த கனவுகளும் இன்றும் வழிகாட்டுகின்றன.
இந்தநிலையில் நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தியின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் டெல்லி ராஜ்காட் வீர்பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இதேபோல ,
நெல்லை காங். MP ராபர்ட் புரூஸ் ,தமிழக காங்கிரஸ் மாநில செயலாளர் கமலிகா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் வீர்பூமியில் உள்ள ராஜீவ் காந்திநினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.