66 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன.. முதல்வர் ரங்கசாமி பெருமிதம்!

Loading

புதுச்சேரி மாநிலத்தில், இதுவரை 66 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன முதல்வர் ரங்கசாமி சுதந்திர தினஉரையில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து போலீசார் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
அப்போது முதல்வர் ரங்கசாமி சுதந்திர தினஉரையில் கூறியிருப்பதாவது: தனிநபர் வருமானத்தை 3,02,680 ஆக உயர்த்தி இருக்கிறோம்- 2020-21-ல் 6.7 விழுக்காடாக இருந்த வேலைவாய்ப்பின்மையை 4.3 விழுக்காடாக குறைத்து இருக்கிறோம்- முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்,

அரசு மேற்கொண்ட சிரிய முயற்சிகளை விளைவாக 2020-21-ஆம் ஆண்டில் 26,759 ஹெக்டராக இருந்த முட்டை பயிர் சாகுபடி பரப்பளவு தற்போது 30,416 ஹெக்டராக உயர்ந்துள்ளது. முதியோர் மற்றும் ஆதரவற்றோர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் புதிதாக 10,000 பயனாளிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வீட்டுக்கு போய் இவர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் 12,000லிருந்து 15,000 ஆக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில், இதுவரை 66 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், இத்திறனை 2026ஆம் ஆண்டிற்குள் 100 மெகா வாட்டாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,

புதுச்சேரியின் நான்கு பகுதிகளுக்கும் குடிநீர் திட்டம், சாலை வசதிகள், கழிவுநீர் பாதாள சாக்கடைத் திட்டம், நெரிசலை சமாளிக்கும் கட்டமைப்பு மற்றும் உப்பு நீக்கும் ஆலை அமைப்பதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியின் மூலம் ₹4,750 கோடி கடன் பெற்று அடுத்த 5 ஆண்டுகளில் முடிக்கும் திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

புதுச்சேரி வரலாற்றில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு வசதித் திட்டமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சி பரப்பின் 2024 ஆம் ஆண்டுக்கான தலைமைச் செயலரின் சிறந்த காவல் நிலையத்துக்கான விருது காரைக்கால் டி.ஆர்.பட்டினம் காவல் நிலையத்துக்கு வழங்கப்பட்டது.

0Shares