புதிய நகர் குடியிருப்பு பகுதிகளுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும்..முதல்வரிடம் MLA சந்திர பிரியங்கா வலியுறுத்தல்!
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனை ஏரியாக்களில் உருவாகியுள்ள புதிய நகர் குடியிருப்பு பகுதிகளுக்கு உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும் என நெடுங்காடு கோட்டுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திருமதி Dr.C.சந்திர பிரியங்கா அவர்கள், மாண்புமிகு மக்கள் முதல்வர் திரு N.ரங்கசாமி ஐயா அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து நெடுங்காடு – கோட்டுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
பத்திரிக்கைச் செய்தியில் கூறியிருப்பதாவது:இன்று 14.08.2025 நெடுங்காடு கோட்டுச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைப்ன்பிரிவு பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டு பல்வேறு குடியிருப்பு நகர்கள் உருவாகியுள்ளன.
நீண்ட காலமாக அப்பகுதிகளில் வசித்து வருகின்ற போதிலும், அங்கீகாரம் இல்லாத ஒரே காரணத்தினால் கொம்யூன் பஞ்சாயத்து, அந்த பகுதிகளுக்கு சாலை வசதி செய்து தர மறுத்து வருகிறது.இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியாங்கா அவர்கள் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், பஞ்சாயத்துகளிலும் கோரிக்கைகளை முன்வைத்தும் பல்வேறு காரணங்களைக் கூறி காலதாமதம் செய்து வந்தனர்.
எனவே, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனை ஏரியாக்களில் உருவாகியுள்ள புதிய நகர் குடியிருப்பு பகுதிகளுக்கு உடனடியாக சாலை வசதி செய்து தர வேண்டும் என நெடுங்காடு கோட்டுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திருமதி Dr.C.சந்திர பிரியங்கா அவர்கள், மாண்புமிகு மக்கள் முதல்வர் திரு N.ரங்கசாமி ஐயா அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.அந்த கோரிக்கையை தொடர்ந்து, முதலமைச்சர் அவர்கள், அதனை உரிய செயலருக்கு பரிந்துரை செய்து, உடனடியாக சாலை வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .