50க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம், நகை பறிப்பு – 24 வயது வாலிபர் சஜு கைது!
கேரளா இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சஜு (24), வேலைக்கு செல்லும் அல்லது தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து காரில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து, நகைகளை பறித்து வந்தது வெளிச்சமிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் கட்டிட வேலைக்காக இருந்த பெண்ணை காரில் அழைத்து சென்று பலாத்காரம் செய்த வழக்கில், இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சஜுவை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் கர்நாடகாவில் இருந்து பிடித்து சிறையில் அடைத்தனர்.
அவரது செல்போனில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பெண்களை மிரட்டி மீண்டும் பலாத்காரம் செய்து, நகை–பணத்தை பறித்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது.பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை இலக்காக வைத்து அவர்களை வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி பலாத்காரம் செய்து நகை, பணத்தை பறித்துக்கொண்டு சென்று விடுவார்..
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் பேசும் திறமை கொண்ட சஜு, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் குற்றங்களில் ஈடுபட்டிருந்தார்.இடுக்கி மாவட்டத்தில் இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டு சிறைக்கு சென்று வெளியே வந்துள்ளார். முன்பு சிறைக்கு சென்றும், மீண்டும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்ததும் தெரியவந்தது.
போலீசார், மேலும் பல பெண்கள் இவரது வலையில் சிக்கியிருக்கலாம் என சந்தேகித்து, கஸ்டடிக்கு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.