தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Loading

மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மதுரை மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரையில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு, மதுரை தெற்கு மற்றும் மதுரை வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வளாகத்தில் தமிழக அரசை கண்டித்து மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மதுரை மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் முத்தையா, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில செயலாளர் முருகன், சிவாஜி கணேசன், ராஜ பத்மநாபன், ராஜா, ராமச்சந்திரன், சக்திவேல், பாண்டி, மயில் மூலப்பொருள், இளஞ்செழியன், பாஸ்கரன், செந்தில், அர்ச்சுனன், பழனியப்பன், அமுதா மற்றும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல பழனியில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் ஆணவ படுகொலைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தில் பொறியாளர் கவின் குமார் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் , ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் இரணியன் தலைமை தாங்க ,இந்திய தேசிய காங்கிரஸ் ,தமிழர் விடியல் கட்சி ,இந்திய குடியரசு கட்சி, ஆதித்தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தோழமைக் கட்சியின் பொறுப்பாளர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, உடனடியாக ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

0Shares