சென்னையில் பரவலாக மழை..வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 13ம் தேதி வாக்கில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . மேலும் வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையின் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை கொட்டியது.இதனால் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், கிண்டி, மேடவாக்கம், அய்யப்பன்தாங்கல், போரூர், ஆதம்பாக்கம் உள்பட மாநகர், புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.