மீண்டும் சாத்தூர் அருகே பட்டாசு விபத்து.. 3 பேர் பலி!
சாத்தூர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடித்து சிதறியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி, விருதுநகர் ,சாத்தூர் போன்ற பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முழுவீச்சில் பட்டாசு தயார் செய்து அதனை வெளியூர்களுக்கு அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பட்டாசுகள் தமிழகமும் மட்டுமில்லாமல் வெளிநாடு வெளியூர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது ,
அது ஒரு புறம் இருக்க அடிக்கடி வெடி விபத்துகளும் ஏற்பட்டு பல உயிர்களை இழக்க நேரிடுகிறது, சமீப காலமாக சிவகாசி விருதுநகர், சாத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல குடும்பங்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் ,இந்த நிலையில் சாத்தூரருக்கு பட்டாசு சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேரி பரிதாபமாக உயிரிழந்தார்,
பட்டாசு ஆலை விபத்துகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் அது இன்னும் பலனளிக்காமலே போய் உள்ளது ,இந்த பட்டாசு விபத்துக்களை தடுக்க மாநில அரசு தகுந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர், உயிர்பலிகளை வாங்கும் இது போன்ற விபத்துக்களை தடுக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது அதனையும் செயல்படுத்தி அரசாங்கம் ஒரு நல்லதொரு தொடக்கத்தை தர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர், இன்று நடந்த விடுவிபத்தில்விஜயகரிசல்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடித்து சிதறியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், வெடி மருந்து உராய்வு காரணமாக திடீரென தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது