அஜித்குமார் வழக்கில் திருப்பம்: சிபிஐ விசாரணையில் பரபரப்பு தகவல்!

Loading

திருப்புவனம் காவலாளர் அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா புகாரில் சிபிஐ அதிர்ச்சி கண்டுபிடிப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.மேலும், நிகிதா முன்னும் பின்னும் முரண்பாடான தகவல்களை வழங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவில் காவலாளர் அஜித்குமார், நகை திருட்டு குற்றச்சாட்டில் தனிப்படை போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தனிப்படை காவலர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின், அஜித்குமார் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டு, வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டார். விசாரணையை டெல்லியைச் சேர்ந்த சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு டிஎஸ்பி மோகித் குமார் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், சிபிஐ விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோவில் பார்க்கிங்கை விட்டு நிகிதாவின் கார் வெளியே செல்லவே இல்லை என்பதும், அதனால் நகை திருட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் நிகிதா அளித்த புகார் பொய்யாக இருக்கலாம் என்ற சந்தேகம் சிபிஐக்கு எழுந்துள்ளது. மேலும், நிகிதா முன்னும் பின்னும் முரண்பாடான தகவல்களை வழங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

 

 

0Shares