சேலத்தில் பிரபல ஸ்வீட்ஸ் திறப்பு..முதல் நாளே குவிந்த வாடிக்கையாளர்கள்!
சேலத்தில் பிரபல அஸ்வின் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் 5வது கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது.மேலும் 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை லட்டு, மைசூர் பாக்கு, மிக்சர், ஜாங்கிரி கை முறுக்கு, பாதுஷா உள்ளிட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் ஒரு கிலோ 300 ரூபாய்க்கு சிறப்பு விலையில் வழங்கப்படுகிறது.
சேலம் பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு 2003 ஆம் ஆண்டு சிறிய நிறுவனமாக தொடங்கப்பட்ட அஸ்வின் ஸ்வீட்ஸ் & ஸ்னாக்ஸ் நிறுவனம் இப்போது மக்களின் ஆதரவோடு தமிழகம் முழுவதும் 35 க்கும் மேற்பட்ட கிளைகளை விரிவுபடுத்தி செயல்பட்டு வருகிறது. இத்தகைய வளர்ச்சிக்கு காரணமான எங்களின் தரமான பொருட்களை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். சேலத்தில் ராமகிருஷ்ணா ரோடு, அக்ரஹாரம், பேர்லண்ஸ்,குகை ஆகிய 4 இடங்களில் கிளைகளை தொடங்கி செயல்பட்டு வந்த நிறுவனம் தற்போது 5வது கிளையாக ஓமலூர் ரோட்டில் போத்தீஸ் அருகில் துவங்கி செயல்பட உள்ளது.
இந்த கிளையின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அஸ்வின் குழும தலைவர் கே ஆர் வி கணேசன், நிர்வாகிகள் ரங்கராஜ், செல்வகுமாரி, அஸ்வின், சிபி மோகன், நிஷா சிபி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக விநாயகம் மிஷின் ரிசர்ச் பவுண்டேஷன் பதிவாளர் நாகப்பன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி விற்பனையை துவக்கி வைத்தார். தொழிலதிபர்கள் ராமநாதன் அன்னபூர்வமா பாஸ்கர் மஞ்சுளா சஞ்சய் சௌமியா பிரேம்நாத் சாதனா சித்தார்த்தன் லக்ஷ்மி ரவிச்சந்திரன் செல்வராஜா நவ்ஷாத் கார்த்திகேயன் , மீனா சேது, பழனிவேல் பாபு, ஹரி ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
புதிய கிளை திறப்பு விழாவினை முன்னிட்டு திறப்பு விழா சலுகையாக ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு இந்தக் கிளையில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் 40 சதவீதம் சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது. மேலும் 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை லட்டு, மைசூர் பாக்கு, மிக்சர், ஜாங்கிரி கை முறுக்கு, பாதுஷா உள்ளிட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் ஒரு கிலோ 300 ரூபாய்க்கு சிறப்பு விலையில் வழங்கப்படுகிறது. இந்த திறப்பு விழா சிறப்பு சலுகைகளை பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.