லிவ் இன் உறவில் இருந்த நபர் கொலை: காதலி கைது!
லிவ் இன் உறவில் இருந்த காதலனை கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த ஹரிஸ் (40), திருமணமானவர். மனைவியும் இரண்டு மகள்களும் பலியாவாஸ் கிராமத்தில் வசிக்கின்றனர். ஹரிஸ் குருகிராமில் பழைய இரும்புப் பொருட்கள் வியாபாரம் செய்து வந்தார்.
அவருக்கு யஷ்மத் கவுர் (27) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் குருகிராமில் ஒரு வாடகை வீட்டில் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர்.
என்றாலும் ஹரிஸ் தனது மனைவியுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்ததால், இதை எதிர்த்த யஷ்மத் கவுருடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
கடந்த சனிக்கிழமை, ஹரிஸ் மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் நேரத்தில், வெறித்தனமான கோபத்தில் யஷ்மத் கவுர் அவரை கத்தியால் குத்தினார். ஹரிஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, யஷ்மத் கவுரை கைது செய்துள்ளனர். மேலும், ஹரிசின் நண்பர் விஜயிடம் விசாரணை நடந்து வருகிறது.