நெல்லை ஐ.டி. இளைஞர் கொலை: காதலியிடம் 4 மணி நேர விசாரணை..வெளியான பரபரப்பு தகவல்!
சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய கவின் செல்வகணேஷ் (27) கடந்த மாதம் பாளையங்கோட்டையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை, காதல் உறவுக்காக நிகழ்ந்தது எனக் கூறப்படும் நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியரான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித், தனது அக்காள் சுபாஷினியை கவின் காதலித்ததால் சினம் கொண்டு கவினை கொலை செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து சுர்ஜித் கைது செய்யப்பட்டார். அவருக்கு மீண்டும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், கயத்தாறில் தங்கியிருந்த சுபாஷினி (கவின் காதலி) யிடம், போலீசார் நேரில் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்,அவரிடம்,கவினை யார் வரவழைத்தது?யார் அவனை அழைத்து சென்றது?
கொலைக்கும் முன் அவர் யாருடன் இருந்தார்?என்பன உள்ளிட்ட முக்கியமான கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நடவடிக்கைகள்:சிபிசிஐடி போலீசார் கொலை நடந்த இடத்தையும் ஆய்வு செய்துள்ளனர்.
செல்போன் அழைப்புகளையும் கவனமாக கண்காணித்து துப்புகள் தேடப்பட்டுள்ளன.சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனை பிரித்து காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கைகள் தீவிரமாக உள்ளன.
இந்த சார்பில், திங்கட்கிழமை நெல்லை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.