13 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம்: தெலுங்கானாவில் அதிர்ச்சி!

Loading

தெலுங்கானாவில் குழந்தைதிருமணத்தை நடத்திய சிறுமியின் தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குழந்தை திருமணத்தை தடுக்க அரசு சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வருகிறது.முன்னோரு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்தே காணப்பட்டது. சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு திருமணத்தை செய்து வைப்பர்.இதனை தடுக்க அரசு தற்போது சட்டங்களை இயற்றி அதை நடைமுறைப்படுத்தி வருகிறது, இருந்தபோதிலும் சமீப காலமாக ஆங்காங்கே வெளியில் தெரியாமல் ஒரு சில குழந்தையை திருமணங்கள் நடைபெற்றது, ஒரு சில இடங்களில் இந்த குழந்தை திருமணங்கள் வெளியே தெரிய வர அரசு அதிகாரிகள் உடனடியாக அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து அந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.இந்த நிலையில் தெலுங்கானாவில் குழந்தை திருமணம் ஒன்று அரங்கேறி உள்ளது .அதனை தற்போது பார்க்கலாம்.

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம் நந்திகாமா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவரது கணவர் இறந்துவிட்டதால் மனைவி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திவந்தார் . இந்தநிலையில் அவரது 13வயது மகள் அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் நிலையில் அந்த சிறுமிக்கு 40 வயதான ஸ்ரீனிவாஸ் கவுடுவுடன் கடந்த மே மாதம் 28ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சிறுமியிடம் புகாரை பெற்ற போலீசார், சிறுமியின் தாய், கணவன் ஸ்ரீநிவாஸ் கவுடு, புரோக்கர் மற்றும் திருமணத்தை நடத்திய புரோகிதர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

0Shares