இந்த ஆண்டு 4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: டெல்டா பாசனத்திற்கு கூடுதல் நீர் திறப்பு!

Loading

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று வினாடிக்கு 25,400 கன அடி வீதம் அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 25,000 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக சமீப நாட்களாக அணைகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது ,கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜா சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது,

கடந்த மாதம் ஜூன் 29ஆம் தேதி மாலையில் தனது உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியது .இந்த ஆண்டில் முதல்முறையாக 120 அடியை மேட்டூர் அணை எட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அணை வரலாற்றில் 94வது ஆண்டாகவும் நிரம்பியுள்ளது கூடுதல் தகவலாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஐந்தாம் தேதி 26 ஆம் தேதி ஆகிய நாட்கள் மேட்டூர் அணை நிரம்பியது அப்போதும் கர்நாடக நீர் படிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டு மேட்டூர் அணைக்கு தண்ணீர் அதிக அளவில் வந்தது.

நேற்று காலை மேட்டூர் அணை 119 புள்ளி 99 அடியாக இருந்தது அணைக்கு 1965 அடி வீதம் தண்ணீர் வினா டிக்கு வந்து கொண்டிருந்தது, அணையில் இருந்து வினாடிக்கு 18,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது,

நேற்று மாலை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவு தானே 120 எட்டி என்றால் இந்த ஆண்டு நாலாவது முறையாக அணை நிரம்பியுள்ளது பெரிதாக பார்க்கப்படுகிறது ,இந்த நிலையில் இன்று மேட்டூர் அணையை வைத்து நீரின் அளவு நீரின் அளவு 25400 கன அடியில் இருந்து டெல்டா பாசத்திற்காக வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது ,மேலும் நீர் மின் நிலையங்களில் வழியாக வினாடிக்கு 18,000 கனஅடி நீரும் உபரி நீர் போக்கு வழியாக ஏழாயிரம் கன அடி உன் திறக்கப்பட்டு வருகிறது, கிழக்கு மேற்கு பாசனத்திற்காக வினாடிக்கு 400 அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாக அந்த நீர்வளத்துறை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0Shares