அவர்களுக்கு அள்ளி தருகிறார்கள்.. ஆனால் எங்களுக்கு ? மாளவிகா மோகனன் ஆதங்கம்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.
‘பட்டம் போலே’ என்ற மலையாள படத்தின் மூலமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், மாளவிகா மோகனன். அதனைத்தொடர்ந்து கன்னடம், இந்தி மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தினார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘பேட்ட’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்து கலக்கினார். பிரபாஸ் ஜோடியாக ‘தி ராஜாசாப்’ படத்திலும், கார்த்தி ஜோடியாக ‘சர்தார்-2’ படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். இவர் சமீபத்தில் பேசுகையில், ‘சினிமாவில் ஆண் – பெண் பேதம் இருக்கக்கூடாது’ என்று வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறும்போது, ”சினிமாவில் ஆண் – பெண் வேறுபாடு பார்க்கப்படுகிறது. நடிகர்கள் என்றால் ஒரு மரியாதை. நடிகைகள் என்றால் ஒரு மரியாதை. இது மரியாதையை தாண்டி சம்பளத்திலும் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. நடிகர்களுக்கு அள்ளித் தருகிறார்கள். நடிகைகளுக்கு கிள்ளிக் கொடுக்கிறார்கள். இந்த போக்கு மாறவேண்டும்.
சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பெண்களை மதிப்பவர்கள் போல தங்களை காட்டிக்கொள்வார்கள். ஆனால் அந்த முகமூடியை சரியான நேரத்தில் அணிந்து நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறார்கள். அந்தவகையில் கடந்த 5 ஆண்டுகளில் முகமூடி அணிந்திருக்கும் பல நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் புத்திசாலிகள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். எந்தெந்த நேரங்களில் பெண்களை மதிக்கும் வகையில் பேசவேண்டும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் கேமராவுக்கு பின்னால், அவர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள்? என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்”, என்றார்.