கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
மீஞ்சூர் பகுதியில் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார்.
திருவள்ளுர் மாவட்டம், பாண்டூர் ஊராட்சியில் உள்ள இந்திரா கல்வி குழுமத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக ”கல்லூரி சந்தையில்” 55 சுய உதவி குழுக்கள் சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பார்வையிட்டார். இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் எஸ்.செல்வராணி, மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம், வேப்பம்பட்டு ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் மற்றும் பொன்னேரி வட்டம் மீஞ்சூர் பகுதியில் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார்.