200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது!

Loading

திருப்பூர் மாவட்டம்காங்கேயம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 200 கிலோக்கு மேல் காவலர்கள் பறிமுதல் செய்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்திரவின்படி காங்கேயம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் காங்கேயம் காவல் நிலைய ஆய்வாளர் திரு செல்வநாயகம் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் மற்றும் போலீசார் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட் இருந்தனர்.

அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி காங்கேயம் எம் பி எம் நகர் பகுதியில் நவீன் என்பவருக்கு சொந்தமான குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 200 கிலோக்கு மேல் இருந்ததை கைப்பற்றி மற்றும் சம்பந்தப்பட்ட எதிரியான நவீன் என்பவரை கைது செய்தும் இதற்கு காரணமாக இருந்த தங்கபாண்டியன் என்பவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த தடை செய்யப்பட்ட பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்ததை காங்கேயம் பகுதி மக்கள் காங்கேயம் காவல்துறையினரின் பணியை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்..

0Shares