சேலத்தில் ஸ்ரீராமானுஜரின் 108 வது திருநட்சத்திர உற்சவ விழா!

Loading

சேலத்தில் ஸ்ரீராமானுஜரின் 108 வது திருநட்சத்திர உற்சவ விழா!

சேலம் எருமாபாளையம் ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தில் ஸ்ரீராமானுஜரின் 108 வது திருநட்சத்திர உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது .காலை சுப்ரபாதம் கோ பூஜை விஸ்வரூப சேவை,திருவாராதனம்,108 கவச ஸ்தபன விசேஷ திருமஞ்சனம் சிறப்பு அலங்காரம் செய்து ராமானுஜ நூற்றந்தாதி பாராயணம் செய்து ததியாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை சேலம் ஸ்ரீ பகவத் ராமானுஜர் கைங்கரிய சொசைட்டி தலைவர் ஸ்ரீ ராமன் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் பொருளாளர் நரசிம்மமூர்த்தி செயலாளர் முரளிதரன் துணை செயலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

0Shares