கோத்தகிரியில் நடைபெற்றுவந்த 13 – வது காய்கறி கண்காட்சி நிறைவு!
![]()
கோத்தகிரி நேரு பூங்காவில் 13 – வது காய்கறி கண்காட்சி நேற்று துவங்கி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில் கோடை விழா தொடக்கமாக கோத்தகிரி நேரு பூங்காவில் 13 – வது காய்கறி கண்காட்சி நேற்று துவங்கி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் நடைபெற்றது.
காய்கறி கண்காட்சியில் சுற்றுலாப்பயணிகள் அனைவரையும் கவரும் வகையில் 2.5டன் காய்கறிகளால் ஆன ஜல்லிக்கட்டு காளை, உருளை கிழங்கால் ஆன சிலம்பாட்டம்,காரட் மற்றும் பீட்ரூட் ஆகிய காய்கறிகளான மறவன் பட்டாம்பூச்சி, கோவக்காய் பச்சி மிளகாய் காய்கறிகளான மரகப்புறா, பச்சைமிளகாய் ஆன பச்சைகிளி, உட்பட காய்கறிகளால் பலவகை வடிவமைக்கப்பட்டது.
தமிழகத்தில் தோட்டகலை துறை சார்பில் கோயம்புத்தூர் ஈரோடு திருப்பூர் திருவண்ணாமலை தேனி உட்பட பல மாவட்டங்களில் சார்பில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டது.மலை காய்கறிகளான காரட் உருளைக் கிழங்கு பீட்ருட் பாகற்காய் முள்ளங்கி உட்பட பல்வேறு காய்கறிகள் அரங்குகள் அமைக்கபட்டு வைக்கபட்டன.கோத்தகிரி 13வது காய்கறி கண்காட்சியினை காண வெளி மாநில சுற்றுலாப்பயணிகள் உள்ளூர் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு காய்கறிகண்காட்சியினை கண்டுரசித்தனர் .
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கோடை விழாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவரையும் செய்தி அலசல் நாளிதழ் சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.

