காடாம்புலியூர் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா..நடனமாடி அசத்திய மாணவ,மாணவிகள்!
காடாம்புலியூர் ராஜகுரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் உள்ள ராஜகுரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.இதில் டாக்டர். கே.முத்துராமன், யுஎஸ்ஏ விரிவுரையாளர் அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரம் ஜி.சரஸ்வதி முத்துராமன், தலைமை மெடிஸ் தலைமை செவிலியர் அரசு காமராஜர் மருத்துவமனை சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்க வைத்தனர்.
டாக்டர். ஜி.அற்புதவேல் ராஜகுரு கல்வி அறக்கட்டளை தாளாளர் முன்னிலை வகித்தார்,
சிவபாலாஜி, குருநாதன், ராஜகுரு கல்விஅறக்கட்டளை,எம்.வெண்ணிலா, அற்புதவேல்ராஜ், பள்ளியின் நிறுவனர் வரவேற்புரை ஆற்றினார்கள்.ஆசிரியர் பெருமக்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செலுத்தினர்.மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது. மேலும் கலை நிகழ்ச்சி,மயிலாட்டம், ஒயிலாட்டம்,சிலம்பம்,கராத்தே போன்ற நிகழ்ச்சிகளை நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளாக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.