9-வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை..காரணம் என்ன தெரியுமா?
திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாததால் ஆசிரியை ஒருவர் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மந்தைவெளி, திருவேங்கடம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆசிரியை மாளவிகா, 38 வயதான மாளவிகா , அபிராமபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். ஆனால் மாளவிகாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் அதனால் அவருக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், திருமணத்தில் மாளவிகாவுக்கு அவருக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. இதனால் பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், ஆனாலும் அவருடைய பெற்றோர் மாளவிகாவுக்கு தொடர்ந்து வரன் தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை மாளவிகா வழக்கம்போல் நடைபயிற்சி சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது திடீரென அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 9-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த மாளவிகா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் மாளவிகாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இந்த தற்கொலைசம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாததால் ஆசிரியை ஒருவர் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.