அடுத்தடுத்து நிலநடுக்கம்..பீதியில் திபெத் மக்கள்!
திபெத்தில் 2 நாட்களில் 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ,நேபால், இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் சமீப காலமாக அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது. சில பகுதிகளில் லேசான நில அதிர்வுகள்,ஒரு சில இடங்களில் அதிபயங்கர நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.சிலப்பகுதிகளில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் திபெத்தில் 2 நாட்களில் 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திபெத்தில் நேற்று நள்ளிரவு 12.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.மேலும் இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்றும் இதனால், அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என சந்தேகிக்கப்படுவதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறியுள்ளது.
இதேபோல திபெத்தில் கடந்த வியாழக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 3.5 முதல் 4.3 வரையிலான 3 நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பு பகுதியில் அதிக ஆற்றலுடன் நிலப்பகுதிகளை தாக்குவதற்கான சாத்தியம் உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது . இதனால், கட்டிடங்களுக்கும் மக்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியமும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திபெத் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் யுரேசியன் தட்டு பகுதியில் அமைந்துள்ளதனால், சீராக நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்பட கூடிய பகுதிகளாக அவை உள்ளன என சொல்லப்படுகிறது.