துறைமுக இணைப்பு சாலை வாய்க்கால் பாலத்தில் புதிதாக பாதுகாப்பு மதில் சுவர்..MLA அனிபால் கென்னடி ஆய்வு!

Loading

துறைமுக இணைப்பு சாலை வாய்க்கால் பாலத்தில் பாதுகாப்பு மதில் சுவர் அமைக்க அனிபால் கென்னடி ஏம் எல் ஏ தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வலியுறுத்திவந்தார்.இந்தநிலையில் மதில் சுவர் அமைக்க அரசு நிதி ஒதுக்கிஉள்ளது.

புதுச்சேரி உப்பளம் தொகுதி உட்பட்ட அப்துல்கலாம் குடியிருப்பில் இருந்து தொடரும் துறைமுக இணைப்பு சாலையில் இருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை வரை இடையில் இரண்டு வாய்க்கால் பாலங்கள் உள்ளது, சூளைமேடு பின்புறமும் உடையார் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அப்பாலம் வழியாக ஏராளமாக பொது மக்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்கின்றது.ஆனால் அங்கு இருபுறமும் பாதுகாப்பு சுவர் அமைத்து கொடுங்கள் என்று உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தொடர்ச்சியாக அரசிடம் மனு கொடுத்து வலியுறுத்தி வருகிறார்,

அதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பாதுகாப்பு மதில் சுவர் அமைத்து கொடுங்கள் என்று கேட்டு கொண்டார். இதை ஏற்று அரசு மூலம் டெண்டர் விடப்பட்டது, அதனை சட்ட மன்ற உறுப்பினர் பொது பணி துறை இளநிலை பொறியாளர் முருகன் உடன் சென்று பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார், உடன் அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், பொருளாளர் மணிமாறன், கிளை செயலாளர்கள் சந்துரு, இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

0Shares