இந்தி மொழியை ஆட்சிமொழியாக்க துடிப்பது ஏன்? மத்திய அரசுக்கு அமைச்சர் ஏவா வேலு கேள்வி!

Loading

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மூலம் ஆங்கிலம் கற்ற நபர்கள் வெளிநாட்டிற்கு சென்று டாலர்களின் சம்பளம் பெற்று இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தி வருவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏவா வேலு கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு பேருந்து நிலையம் அருகே திமுக கட்சியின் சார்பில் ஒரே இலக்கு தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏவா வேலு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்,காந்தி ஆகியோர் பங்கேற்று மத்திய ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது கண்டன உரையாற்றினர்

இந்த கூட்டத்தின் போது பேசிய அமைச்சர் ஏவா வேலு,பிரதமர் தமிழை ரொம்ப பிடிக்கும் என்கின்றார் வணக்கம், நன்றி என பேசுகிறார் திருக்குறளை பயன்படுத்துகிறார் ,நான்காயிரம் ஆண்டு முற்பட்ட மொழியாக இருக்க கூடிய தமிழ் மொழி பிடிக்கும் என சொல்பவர்கள். காசியில் தமிழ் சங்கத்தை உருவாக்குவோம் சொல்பவர்கள் .500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தி மொழியை விட மிகவும் பழமையான தமிழ் மொழியை ஆட்சி மொழியாக பிரதமர் அறிவித்திருக்க வேண்டும்.

இந்தியை ஆட்சி மொழியாக வேண்டும் என துடிப்பது ஏன்? இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கி எங்கள் பிள்ளைகள் படிப்பதில் என்ன பயன்?

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மூலம் ஆங்கிலம் கற்ற நபர்கள் வெளிநாட்டிற்கு சென்று டாலர்களின் சம்பளம் பெற்று இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தி வருவதாகவும், பீகார், உத்தர பிரதேஷ், மத்திய பிரதேச, போன்ற இந்தி மொழியை படித்தவர்கள் எங்கே வருகிறார்கள், தமிழகத்திற்கு குளத்து வேலை, ஓட்டல் சப்ளையர் வேலை,தச்சு வேலை,என இந்தி படித்தவர்கள் வருகிறாரே தவிர இவர்கள் எந்த நாட்டிற்கு சென்றார்கள்.

தமிழ்நாட்டில் தாய்மொழி உணர்வோடு கற்று அறிவாளியாக இருக்கிறார்கள் என்றும் இந்தியை திணித்து நம் வீட்டுப் பிள்ளைகளின் அறிவை அனைத்தும் மக்க வைப்பதற்கும் மயங்க வைப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்வதாக கூறினார்.

மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் கல்விக்கான பங்குத் தொகையை கொடுப்போம் என ஒன்றிய அரசு நிர்பந்தம் செய்யும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என இந்தி திணிப்பிற்க்கு எதிராக உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்,

ரஷ்யாவை சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் மொழியை காப்பாற்றுவதற்காக போராடினாநோ அது போன்று தமிழகத்தின் மொழிக்காக இரும்பு மனிதராக முதல்வர் ஸ்டாலின் தன்னை அர்ப்பணித்து மொழிக்காக போராடுகிறார் என புகழாரம் சூட்டினார்.

0Shares