மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள்..தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு!

Loading

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் தி.மு.க. சார்பில் வருகிற 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறஉள்ளன.திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசயிருக்கிறார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழி கொள்கை,மற்றும் தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளளது,இதையடுத்து தமிழக அரசு சமீபத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தனது எதிர்ப்பை தெரிவித்ததுடன் கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுவார் என்றும் குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல திருச்சியில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்பர் என்றும் தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.
மேலும் மாவட்டங்களில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்கள் பட்டியலையும் தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

0Shares