தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருக்கு பெயிரா தலைவர் ஹென்றி கோரிக்கை

Loading

01.03.2025 அன்று தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களை, பெயிரா கூட்டமைப்பின் தலைவர் டாக்டர்.     ஆ.ஹென்றி மற்றும் பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து,

புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு திறந்தவெளி நிலம் சம்பந்தமாகவும்,

மாநிலம் முழுவதும் மேம்படுத்தப்படும் புதிய வீட்டுமனை பிரிவிற்கு அணுகு சாலை சம்பந்தமாகவும்,

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உடன் புதியதாக இணைக்கப்படும் கிராம ஊராட்சிகளில் புதிய வீட்டுமனை பிரிவுகளை அமைக்கும் பொழுது அரசாணை எண்.58/2024 இன் படி  அணுகு சாலை விலக்கு சம்பந்தமாகவும்,

மாநில முழுவதும் ஒரே பதிவின் கீழ் கட்டுமான பொறியாளர்களை அனுமதித்து பதிவு செய்வது சம்பந்தமாகவும்,

பழைய வீட்டுமனை பிரிவுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளி, கல்யாண மண்டபம், மருத்துவமனை, சுகாதார மையம், உள்ளிட்ட இனங்களை  வீட்டுமனையாக மாற்றம் செய்வது சம்பந்தமாகவும்,

சிறிய அளவில் மேம்படுத்தப்படும் வீட்டுமனை பிரிவுகளில் மேல் தேக்க குடிநீர் தொட்டி கட்டுவதில் இருந்து விலக்கு அளிப்பது சம்பந்தமாகவும்,

ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்படும் வீட்டுமனை பிரிவுகளுக்கு அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அரசாணை எண் 141/2022 இல் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும்,

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்(TNRERA) பிரச்சனைகள்
சம்பந்தமாகவும்,

வீட்டு மனை உட்பிரிவு அனுமதி சம்பந்தமாகவும்,

அனுமதியற்ற மனைப் பிரிவிற்கு வரன்முறை கோரி விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர் பெயரில் பட்டா கேட்பதை தவிர்க்க வேண்டும் எனவும்,

ஆன்லைன் போர்ட்டலில் 24 துறைகளை ஒருங்கிணைத்து தடையின்மை சான்று பெறுவதற்கான அரசாணை நிலை எண் 185/2024 ஐ அரசிதழில் வெளியிடுவது சம்பந்தமாகவும்,

திட்டமில்லா பகுதியில் நிலப் பயன்பாடு மாற்றம் செய்வதற்கான கட்டணம் குறித்த அரசாணை நிலை எண்.79/2017, இல் சில தெளிவுரை வழங்குவது சம்பந்தமாகவும் நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் வரை தந்து ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எண்ணற்ற திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தும்,

இன்னும் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களை கோரிக்கைகளாக முன்வைத்து ஆலோசித்து, அரசு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்து நடைமுறைப்படுத்திட வேண்டுமென வேண்டுகோள் வைத்தனர்.

மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் அவர்களும் மேற்கண்ட கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டறிந்து, மேற்கண்ட மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவரின் ஆலோசனையை பெற்று, பரிசீலனை செய்து இயன்றவரை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்.

0Shares