கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவு…குழந்தையை கொன்று மனைவி தற்கொலை!

Loading

கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால் குழந்தையை கொன்ற பஞ்சாயத்து தலைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அர்பன் மாவட்டம் பவகடா கிராம பஞ்சாயத்து தலைவி ஷ்ருதி.இவருக்கு வயது 34. பஞ்சாயத்து தலைவி ஷ்ருதிக்கும் நாகசந்திரா பகுதியை சேர்ந்த ஆடிட்டரான கோபாலகிருஷ்ணன் என்பவருடன் 2014ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இந்த தம்பதிக்கு ரோஷிணி 4 வயதில் என்ற பெண் குழந்தை இருந்தது.

இதனிடையே, கோபாலகிருஷ்ணன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார் என கூறப்படுகிறது . இதனால், கணவன், மனைவி இடையே அவ்வப்போது மோதல் நிலவி வந்துள்ளதுடன் ஷ்ருதியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கோபாலகிருஷ்ணன் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால் விரக்தியடைந்த பஞ்சாயத்து தலைவி ஷ்ருதி நேற்று குழந்தை ரோஷிணியை கொலை செய்துள்ளார். அதன் பின்னர் வீட்டில் உள்ள பேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு ஷ்ருதியும் தற்கொலை செய்துகொண்டார். கணவன் வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால் குழந்தையை கொன்ற பஞ்சாயத்து தலைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தற்கொலை செய்துகொள்வதற்குமுன் கடிதம் ஒன்றையும் ஷ்ருதி எழுதி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் ஷ்ருதி, ரோஷிணி ஆகியோரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0Shares