தூய்மை இந்தியா இயக்கம் பொது சுகாதாரத்தை மேம்படுத்திஉயிர்களைக் காப்பாற்றுகிறது டாக்டர் வினோத் பால்
தூய்மை இந்தியா இயக்கம் பொது சுகாதாரத்தை மேம்படுத்திஉயிர்களைக் காப்பாற்றுகிறதுடாக்டர் வினோத் பால்
நித்தி ஆயோக்கின் உறுப்பினர்.
சுகாதாரம் என்பது ஒரு அடிப்படையான பொது சுகாதார தலையீடு ஆகும்.
வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, ஹெபடைடிஸ், புழு தொற்று,
ஊட்டச்சத்து குறைபாடு போன்ற நீரினால் பரவும் நோய்களின் அபாயத்தை
சுகாதாரம் குறைக்கிறது. 2012-ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின்
ஆய்வில், துப்புரவுக்காக முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு அமெரிக்க
டாலருக்கும், குறைந்த சுகாதார செலவுகள், அதிக உற்பத்தித்திறன், குறைவான
அகால மரணங்கள் ஆகியவற்றால் 5.5 அமெரிக்க டாலர் பயன் கிடைக்கிறது
என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுகாதாரம் ஒரு ஆழமான வேரூன்றிய வரலாற்றைக்
கொண்டுள்ளது, இது சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தொடங்குகிறது,
அங்கு கழிப்பறை கட்டுமானம், கழிவு மேலாண்மைக்கான அறிவியல்
முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தூய உடலில் தூய மனம் இருக்கும்,
தூய மனதில் உண்மையான அறிவு இருக்கும் என்று நமது வேதங்கள்
கூறுகின்றன.
இந்த வளமான பாரம்பரியம் இருந்தபோதிலும், விரிவான துப்புரவு பாதுகாப்பை
நோக்கிய இந்தியாவின் பயணம் சவால்கள் நிறைந்ததாகவே உள்ளது. 1981
மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, கிராமப்புற குடும்பங்களில் வெறும் 1%
மட்டுமே கழிப்பறை வசதி இருந்தது. இது இந்திய அரசால் துப்புரவு
திட்டங்களான மத்திய கிராமப்புற துப்புரவு திட்டம், முழு துப்புரவு இயக்கம்
மற்றும் நிர்மல் பாரத் அபியான் தொடங்க வழி வகுத்தது. இந்த முயற்சிகள்
கிராமப்புற துப்புரவு பாதுகாப்பை 39% ஆக உயர்த்தின.
50 கோடிக்கும் அதிகமான மக்கள் திறந்தவெளிக் கழிப்பிடத்தைப் பயன்படுத்தி
வந்தனர். தங்கள் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் பேணுவதற்கு
இருட்டையே பெண்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்தப் பின்னணியில்தான் பிரதமர் திரு நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டில்
கிராமப்புற இந்தியாவை ஐந்து ஆண்டுகளில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத
நாடாக மாற்றும் இலக்குடன் தூய்மை இந்தியா இயக்கத்தைத் தொடங்கினார்.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளான 2019 அக்டோபர் 2 அன்று பாரதம்
இந்த மைல்கல்லை எட்டியது. ஐந்து ஆண்டுகளில்,கிராமப்புற துப்புரவு
பாதுகாப்பு 100% ஆக உயர்ந்தது.
இந்த இயக்கத்தின் கீழ், 2014 முதல் 1.4 லட்சம் கோடிக்கும் அதிகமான
முதலீட்டில் 11.7 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இதுவெறுமனே சொத்து உருவாக்கும் நடவடிக்கையாக மட்டுமல்லாமல் ஒரு
பில்லியனுக்கும் அதிகமான மக்களை உற்சாகப்படுத்திய ஒரு நாடு தழுவிய
இயக்கமாக உள்கட்டமைப்பு வளர்ச்சியை வலுவான நடத்தை மாற்ற
புரட்சியுடன் இணைத்தது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள், சமூகத்
தலைவர்கள், சிவில் சமூகம், அரசு இயந்திரம் ஆகியோர் ஒன்றிணைந்து
செயல்பட்டு, இதனை மக்கள் இயக்கமாக மாற்றினர்.
தூய்மை இந்தியா இயக்கத்தின் முதல் கட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து,
இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டது. இந்தக் கட்டம் திட மற்றும் திரவ கழிவு
மேலாண்மை, காட்சி தூய்மை மற்றும் ஒட்டுமொத்த கிராமப்புற சுகாதாரம்
ஆகியவற்றின் பரந்த அம்சங்களை நிவர்த்தி செய்யும் அதே நேரத்தில்
திறந்தவெளி கழிப்பிட தடை சாதனைகளை நிலைநிறுத்துவதை நோக்கமாகக்
கொண்டுள்ளது. 2024-25-ஆம் ஆண்டுக்குள், அனைத்து கிராமங்களையும்
திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கூடுதல் முன்மாதிரியாக மாற்றுவதே இதன்
இலக்காகும்.
உயர்மட்ட சர்வதேச இதழான 'நேச்சர்' இல் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய
ஆய்வு, பொது சுகாதாரத்தில், குறிப்பாக குழந்தை இறப்பு விகிதங்களைக்
குறைப்பதில் தூய்மை இந்தியா இயக்கத்தின் ஆழமான தாக்கத்தை
அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த இயக்கம் தனது 1௦-வது ஆண்டு விழாவை அடுத்த மாதம் காந்தி ஜெயந்தி
அன்று கொண்டாடுகிறது. தூய்மை இந்தியா இயக்கத்தின் பத்தாண்டுகள்
முன்னெப்போதும் இல்லாத வெற்றிகளை அளித்துள்ளன. தூய்மையான
சுற்றுச்சூழல், பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு, வாழ்க்கையை
எளிதாக்குதல், வீட்டுச் சேமிப்பு மற்றும் நமது பாரம்பரியத்துடன் இணைந்த
சுகாதார கலாச்சாரம் ஆகியவை இதில் அடங்கும். பொது சுகாதாரத்தை
மேம்படுத்துவதிலும், உயிர்களைக் காப்பாற்றுவதிலும் தூய்மை இந்தியா
இயக்கத்தின் வலுவான சான்றுகளையும் இப்போது நாம் காண்கிறோம்.
இந்த உன்னதமான இயக்கத்தின் வெற்றி உண்மையில் ஒவ்வொரு
இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விஷயமாகும்.