அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு இல்லாத மாணவ மாணவிகளுக்கு விங்ஸ் மற்றும் சீட்ஸ் என்ற பெயரில் கல்வி உதவித் தொகை

Loading

அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு இல்லாத மாணவ மாணவிகளுக்கு விங்ஸ் மற்றும் சீட்ஸ் என்ற பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் : மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் செப் 14 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஸ்ரீபெரும்புதூர் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி அரசுப் பள்ளியில் பயின்ற அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு இல்லாத மாணவ மாணவிகளுக்கு  விங்ஸ் மற்றும் சீட்ஸ் என்ற பெயரில் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் துவக்கி வைத்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் விங்ஸ் மற்றும் சீட்ஸ் என்ற பெயரில் அரசின் 7.5% இட ஒதுக்கீட்டில் இல்லாத மாணவ மாணவிகளுக்கு நான்கு வருட பொறியியல் படிப்பிற்கான முழு செலவையும் ஏ.ஜி. முத்தையா தலைமையிலான கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் திட்டத்தில் முதற்கட்டமாக 20  மாணவ மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்க்கப்பட்டதற்கான சான்றினை  மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் வழங்கினார்.இதில் கல்லூரி முதல்வர் கணேஷ் வைத்தியநாதன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares