தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாட்டம்
தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாட்டம்
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில்
தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா மறைவுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில்மூத்த பத்திரிக்கையாளர் இசைக்கும் மணி வரவேற்பு நிகழ்த்தினார் சிறப்பு விருந்தினராக பொதிகை தொலைக்காட்சியின் முன்னாள் தலைவர் ஐ. விஜயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அவர் பேசுகையில் பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளை அரசிடம் கேட்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் பத்திரிகையாளர்கள் தங்களது உரிமைகளை கேட்டு பெற வேண்டும் மற்றும் அவர்கள் அனைவருமே தகுதியுள்ள பத்திரிகையாளராக மாற வேண்டும் அப்போதுதான் பத்திரிகையாளர்களை அரசியல்வாதிகளும் பொதுமக்களும் மதிப்பார்கள் என்று தெரிவித்தார் மேலும் சங்கத்தின் தேசியத் தலைவர் முனைவர் எஸ்.இராஜேந்திரன் பேசுகையில் நான்காவது தூன்ன் என்று அழைக்கப்படும் தூணை பலப்படுத்தும் வகையில் அனைத்து ஊடக நண்பர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே நான்காவது துணை காப்பாற்ற முடியும் என்று தெரிவித்தார்.

இதில் மூத்த பத்திரிக்கையாளர்கள் இசைக்கும் மணி ,மற்றும் அருண் அசோகன் ஆகியோருக்கு கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
பத்திரிகையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது