கொடை விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும்
தென் மாவட்டங்களில் குல தெய்வங்கள் அல்லது குடி தெய்வங்கள் மற்றும் சிறு தெய்வ வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாகக் கருதி மக்கள் தொன்று தொட்டு வணங்கி வருகின்றனர். அந்த வகையில் சிவ ரூபமாகக் கருதப்படும் சுடலை மாடசாமி வழிபாடு தென்காசி, திருநெல்வேலி தூத்துக்குடி , கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் தென்காசி மாவட்டம் வடகரை அருகே அனுமாநதியின் தென்பகுதியில் அமைந்துள்ள கரிசல் குடியிருப்பு ஆற்றடி உச்சிஷ்ட கணபதி சுடலைமாடசாமி பேச்சியம்மன் இசக்கியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கொடை விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஏப்ரல் 13, 14,15 வியாழன் , வெள்ளி, சனி மூன்று நாட்கள் நடைபெற உள்ளதையொட்டி வருகின்ற ஏப்ரல் 7 வெள்ளிக்கிழமை அன்று கால்நட்டு வைபவம் நடைபெற உள்ளது.
07.04.2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 முதல் 6.00 மணிக்குள் கொடைவிழா பந்தக்கால் நடும் விழா நடைபெறுகிறது. அதனையொட்டி குற்றால தீர்த்தம் எடுப்போர் காப்பு கட்டும் நிகழ்வும் நடைபெற உள்ளதால் பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என விழாக்கமிட்டியாளர்கள் தெரிவித்தனர்.
13.04.2023 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் குற்றால தீர்த்தம் அழைப்பும் 9.00 மணிக்கு கணபதி ஹோமம் சுடலை மாடசாமிக்கு அபிஷேகம் அலங்காரமும் சுவாமிக்கு கும்பம் ஏற்றும் நிகழ்வும் 11.00 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
14.04.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு. சிறப்புஅபிஷேகங்கள் அலங்காரம் பூஜைகளும், நண்பகல் 12 மணிக்கு மதிய பூஜையும் , இரவு 10.30 மணிக்கு சுடலை மாடசாமிக்கு பூஜையும் , 12.30 மணிக்கு சாம பூஜையும் நடைபெறும் .
15.04.2023 சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு சுவாமிக்கு பூஜை நடைபெறும் எனவும் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு செங்கோட்டை ஐயப்பன் குழுவினரின் நைய்யாண்டி மேளமும், கடையநல்லூர் தொப்பை பெருமாள் மாடசாமி குழுவினரின் வில்லிசையும், மேலகரம் ராமச்சந்திரன் கணியான் மகுட இசையும் நடைபெறும் எனவும் விழாக்கமிட்டியாளர்கள் தெரிவித்தனர்.