பேரணாம்பட்டு நகராட்சியில் நகர மன்ற கூட்டம்

Loading

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நேற்று நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜிபேர்ஹமது, தலைமையிலும் ஆணையாளர் சுபாஷினி, முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சி ஊழியர்கள் நகர மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர் ஆலியார் சுல்தான் அகமத் நகர மன்ற கூட்டத்தில் தனது ஒன்பதாவது வாடுக்கு கீழ்கண்ட  அடிப்படை வசதிகள் தேவை என முறையிட்டார். இதில் கால்வாய் வசதி, சாலை வசதி, மின்விளக்கு, சீரான குடிநீர், வழங்க வேண்டும் எனக் கோரிக்கையை முன் வைத்தார். இவை அனைத்தையும் கேட்டுக் கொண்ட நகர மன்றத் துணைத் தலைவர் மற்றும் ஆணையர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்கள்.
0Shares

Leave a Reply