கருத்தரங்கம் சோனா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.
தமிழ்நாடு மேம்பட்ட முறைக்கான திறன்மிகு மையம் (TIDCO) தசோ சிஸ்டம்ஸ் (Dassault Systemes) மற்றும் சோனா ஸ்டார் நிறுவனமும் இணைந்துபொறியியல் வடிவமைப்பில் பெண்கள் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம்தமிழ்நாடு மேம்பட்ட முறைக்கான திறன்மிகு மையம் (TIDCO) தசோ சிஸ்டம்ஸ் (Dassault Systemes) மற்றும் சோனா ஸ்டார் நிறுவனமும் இணைந்து பொறியியல் வடிவமைப்பில் பெண்கள் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் சோனா கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.இந்த நிகழ்வு தமிழக அரசால் தொடங்கப்பட்ட தொழில் திறனை மேம்படுத்தும் நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.சோனா கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற விழாவில் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் வணிகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லாரிண்டிகி பச்சுவா ஐ.ஏ.எஸ், டேன்கேம் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அசோக் லேலண்ட் வடிவமைப்பு துணைத் தலைவர் சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.இதனைத்தொடர்ந்து சோனா கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா பேசும் பொழுது சோனா தொழில்நுட்பக் கல்லூரியும், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியும் டேன்கேம், தசோ சிஸ்டம் நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரவேண்டும் என்ற இலக்கை கொண்டு செயல்படுகிறோம். மாணவர்களுக்கு பிரத்யோக உற்பத்தி திறன் மற்றும் மேம்பாட்டு பயிற்சி கொண்டு சர்வதேச நிறுவனங்களில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு பெற கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் அதிக அளவில் உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியவும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் அவர்களின் புதிய கண்டுபிடிப்பதற்கும், ஆராய்ச்சிக்கு சோனா ஸ்டார் நிறுவனமும் டேன்கேமும் இணைந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ் நாடு முதல்வரின் 1 டிரிலியன் டாலர் பொருளாதார இலக்கை செயல்படுத்துவதற்கு இந்த முயற்சி பெரும் ஊன்றுகோலாக இருக்கும் என்றார்.இறுதியாக தியாகராஜர் பாலிடெக்னீக் கல்லூரி முதல்வர் வீ.கார்த்திகேயன் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் டேன்கேம் நிர்வாகி விஜயதீபன் மற்றும் குழுவினர், துறைத்தலைவர்கள் செந்தில்குமார், சுரேஷ், சோனா ஸ்டார் குழுவினர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.