ஏழு வார்டுகளின் உறுப்பினர்க ளுக்கான தேர்தல்
நீலகிரி மாவட்டத்திலுள்ள வெலிங்டன் கண்டோன்மெண்ட் நகரியத்தில் உள்ள ஏழு வார்டுகளின் உறுப்பினர்க
ளுக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல்- 30 ம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்பும் கழக தோழர்களிடமிருந்து விருப்பமனுக்கள் பெறும் நிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட திமுக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில்,மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திமுக சார்பில் போட்டியிட விரும்பி 70 – க்கும் மேற்பட்ட கழகத்தினர், தங்கள் விருப்பமனுக்களை ஆர்வத்துடன் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் அவர்களிடம் வழங்கினர் குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, பில்லன், தொரை, ஜெகதளா பேரூராட்சி செயலாளர் சஞ்சீவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி முடிவில் கண்டோன்மென்ட் நகரிய செயலாளர் மார்டின் நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் குன்னூர் ஒன்றியம் மற்றும் கண்டோன்மென்ட் நகரியத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.