யானை தாக்கிஉயிரிழந்த விவசாய குடும்பத்தை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்ச்சியரும் உணவுத்துறை அமைச்சரும்.

Loading

ஒட்டன்சத்திரம் அருகே கோம்பை வனப்பகுதியில் ஒற்றை யானை தாக்கிஉயிரிழந்த விவசாய குடும்பத்தை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்ச்சியரும் உணவுத்துறை அமைச்சரும்.கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம்  சிந்தலவாடம்பட்டி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட கோம்பை வனப்பகுதியில் தண்டபாணி என்ற விவசாயி ஒற்றை காட்டு யானை கொடூரமாக தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதற்காக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் நேரில் சென்று அப்பகுதிகளை பார்வையிட்டு இறந்த தண்டபாணியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதி உதவியாக ரூபாய் 50ஆயிரம் வழங்கியும், இறந்த தண்டபாணியின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும் உறுதி அளித்தார் இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது இந்த விவசாயின் குடும்பத்திற்கு அரசு வேலை கிடைத்தால் இறந்த தண்டபாணியின் ஆன்மா சாந்தியும் அடையுமென ஊர் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply