கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்க சான்றிதழை
இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படும் முதலமைச்சர் காவல் பதக்க சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஷ்ருதி, இ.கா.ப., அவர்கள் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) விசுவேசுவரய்யா உடன் இருந்தார்.