428வது அவதார திருநாளை முன்னிட்டு மஹா அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது.
ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஸ்ரீ ராகவேந்திரா டிரஸ்ட் சார்பில் ஸ்ரீ ராகவேந்திரரின் 428வது அவதார திருநாளை முன்னிட்டு மஹா அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகர காவல் உதவி ஆய்வாளர் மகாராஜன், வேலூர் அனுமன் பக்தத சபை நிறுவனர் ஏ.எஸ் பழனி , ஆற்காடு சிவன் சக்தி திரையரங்கம் உரிமையாளர் பி.என்.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் தலைவர் சேட்டு (எ) பரசுராமன் தலைமை தாங்கினார் .இந்த நிகழ்ச்சியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காவலர்கள், எஸ்.தக்ஷிணாமூர்த்தி, எஸ்.கதிரவன், ஏ.எல்.பாலாஜி ஆர்.கே.ஏஜென்சிஸ் ராதாகிருஷ்ணன், ஆற்காடு அன்னபூரணி டிரஸ்ட் நிறுவனர் ரவிச்சந்திரன், எஸ்.ஏ.தேவதாஸ் மகான் தோபா சுவாமி பூண்டி ஜெயபால் மற்றும் டிரஸ்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு சுவாமிக்கு பூஜை செய்து பிரசாதம் படையலிட்டு விழாவை சிறப்பித்தனர்.