காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்கு அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். அமை;சசர் கீதாஜீவன் ஈரோட்டில் பேச்சு

Loading

தூத்துக்குடி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஈரோடு கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் திமுக ஆட்சியில் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா துறைகளிலும் தமிழகம் நம் ஒன் மாநிலமாக வரவேண்டும் என்று 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைத்து கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதி மட்டுமின்றி சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் அதிமுக வழங்காத உதவித்தொகை ரூ 4 ஆயிரம் எல்லோருக்கும் முதலமைச்சர் வழங்கினார். அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ஊக்க தொகை திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு மீண்டும் ஆட்சிக்கு வந்த போது மேலும் பல குழுக்களை உருவாக்கும் வகையில் கடன் உதவி வழங்கும் ஊக்குவிக்கப்பட்டன. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீதம் வேலை வாய்ப்பில் 30 சதவீதம் என கலைஞர் காலந்தொட்டு தற்போது முதலமைச்சர் ஆட்சியில் பெண்களுக்கான என்னற்ற திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் விவசாயம் நெசவாளர்கள் என அனைத்து தரப்பினரும் பயணடையும் வகையில் தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டன. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் துவக்கி வைக்கயுள்ளார். அனைவரும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் திமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரம் மூலம் வழங்கி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்கு முழுமையாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கனகராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், வட்டசெயலாளர்கள் கதிரேசன், பாலு, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், ராதா, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன்னுச்சாமி, அல்பட், மற்றும் மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி மணி, மாவட்ட பிரதிநிதி மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply