சிறப்பாக பணியாற்றி வரும் குன்னூர் போக்குவரத்து காவல் துறை
சிறப்பாக பணியாற்றி வரும் குன்னூர் போக்குவரத்து காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்: காவல் துறை பொது மக்களின் நண்பன் என்ற வாசகதிற்கு ஏற்ப, நீலகிரி மாவட்டம் குன்னூர் போக்குவரத்து காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி அவர்கள் பணி மிக சிறப்பானது.போக்குவரத்தினை சரி செய்வதும், இரு சக்கர வாகன மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு வாகன விழிப்புணர்வினை வழங்கியும்,சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வாசகதிற்கு ஏற்ப,போக்குவரத்து விதி முறைகளை மீறி வாகனங்களை ஓட்டும் வாகன ஓட்டிகள் யாராக இருந்தாலும்,போக்குவரத்து விதிகளின் படி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும்,வாகன ஓட்டிகளுக்கு வாகன விழிப்புணர்வினை வழங்கியும்,சிறப்பாக பணியாற்றி வருகிறார். மேலும், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குன்னூர் போக்குவரத்து வெவல் கிராஸ் பகுதியில் அருகே சாலையில் உடைந்து கிடந்த கண்ணாடி துண்டுகளால் இந்த சாலையில் நடந்து செல்லும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கபடக்கூடாது என்ற சிறந்த எண்ணத்தில், சாலையில் உடைந்து கிடந்த கண்ணாடி துண்டுகளை தானே துடப்பத்தால் இந்த பகுதியினை சுத்தம் செய்து மிக சிறப்பான சமுதாய பணியாற்றினார்.எவ்வித பிரதிபலனுமின்றி, பொது மக்களுக்காக மிக சிறப்பாக பணியாற்றி வரும் குன்னூர் போக்குவரத்து காவல் துறை சிறப்பு உதவியாளர் ரவி அவர்களுக்கு செய்தி அலசல் நாளிதழ் சார்பாகவும்,வாகன ஓட்டிகள் சார்பாகவும்,பொது மக்கள் சார்பாகவும்,மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பாகவும், மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.