அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார்
ஈரோடு மாநகரம் குமிலன்குட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சாலை விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணியினை தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார். உடன் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா ஈரோடு மாநகராட்சி மேயர் . நாகரத்தினம் , துணை மேயர் செல்வராஜ்,,மாமன்ற உறுப்பினர் மோகன் குமார்,மாநில ,மாவட்ட, மாநகர ,பகுதி கழக வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர் .