டோல்கேட் அருகே அகற்றிய பேரிகார்டை மீண்டும் அமைக்க பொதுமக்கள் மனு
டோல்கேட் அருகே அகற்றிய பேரிகார்டை மீண்டும் அமைக்க பொதுமக்கள் மனுதருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்களிடம் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது நல்லம்பள்ளியை அடுத்த பாளையத்தில் டோல்கேட் உள்ளது அதன் அருகே தருமபுரி மார்கத்தில் டோல்கேட்டுக்கு சொந்தமான கழிவறை உள்ளது நான்கு வழிச்சாலையில் பல இடங்களில் டோல்கேட்டுக்கு சொந்தமான கழிவறை இல்லாததால் வாகன ஓட்டிகள் இங்குள்ள கழிவறைக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர் இதனால் கழிவறை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது இதை தடுக்கும் வகையில் நான்கு வழிச்சாலையின் இருபகுதிகளிலும் பேரிகார்டு அமைக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் டோல்கேட் நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பேரிகார்டை அகற்றியது இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதை தடுக்க டோல்கேட் நிர்வாகம் மீண்டும் கழிவறை அருகே பேரிகார்டை அமைக்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.