நடிகர் அஜித்குமாரின் உருவம் பதித்த கேஸ் பலூன் தியேட்டரின் மேலே ஏற்றப்பட்டு,
சேலம் மாநகர் ஐந்து ரோடு அருகில் உள்ள கௌரி தியேட்டரில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெற்றி பெற வேண்டி அஜித்குமார் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் எம்.பண்டுபாய், மாவட்ட செயலாளர் எஸ்.செவன் ஜி. சிவா, மாவட்ட பொருளாளர் எம். எஸ். காமராஜ் தலைமையில் மாவட்ட துணைதலைவர் எல்.வெங்கடேசின் ஏற்பாட்டின் பேரில், நடிகர் அஜித்குமாரின் உருவம் பதித்த கேஸ் பலூன் தியேட்டரின் மேலே ஏற்றப்பட்டு, கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.