எம்.எல்.ஏ. விடம் பாராட்டு பெற்ற ஓவிய ஆசிரியர்

Loading

ஓவியத்தில் பல புதுமைகளும், சாதனைகளும் புரிந்து வரும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் அவர்களை சந்தித்து ஓவியத்தில் சாதனை படைத்ததற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் பெற்றார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் அவர்கள் ஓவிய திறமையால் பல புதுமைகள், சாதனைகள் படைத்து வருகிறார்.மேலும் இவர் ஓவியத்தின் மூலம் மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, தண்ணீர் சேமிப்பு, சுற்றுசூழ்நிலை பாதுகாப்பு போன்ற ஓவியங்கள் மற்றும் தமிழக அரசின் திட்டங்களை தன் ஓவிய திறமையால் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் அவர்களை சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் பெற்றார். மணலூர்பேட்டை திமுக நகர செயலாளர் ஜெய்கனேஷ், நகர துணை செயலாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
0Shares

Leave a Reply