ஊத்தங்கரை அருகே மான் வேட்டை சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி*

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோள்ளபட்டி கிராமத்தில் இருக்கும் எத்திராஜ் என்பவரின் சொந்தமான மாந்தோப்பில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கம்பி கட்டி மின்சாரம் செலுத்தி மான் மற்றும் காட்டுப்பன்றி ஆகியவர்களை வேட்டையாட சென்றதாக கூறப்படுகிறது. அதில் அதிக மின்னழுத்தம் கொண்ட மின்கம்பத்தில்   இருந்து திருட்டு மின்சாரம் மூலம் மின்சாரம் இணைப்பு எடுத்த நிலையில் அதை துண்டிக்க  வரும்பொழுது எதிர்பாராத விதமாக சாலமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் ரஞ்சித் (30) என்ற நபர் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து எரிந்த நிலையில் சடலமா கிடந்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்தங்கரை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  அமல் அட்வின் விசாரணை நடத்தி வருகிறார்.மேலும் இறந்து ரஞ்சித்துடன் வந்த நபர்கள் யார் யார் எத்தனைபேர் வந்தனர் என சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து  தேடி வருகின்றனர். இறந்தவரின் உடலை மீட்ட காவல்துறையினர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுகிறது.
0Shares

Leave a Reply