முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் .
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அனைத்து வழிகாட்டு முறைகளை மாணவ, மாணவியர்கள் எளிதில் அறிந்துகொண்டு பயன்பெறும் வகையில் “நான் முதல்வன்” என்ற திட்டத்தினை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இத்திட்டம் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைக்கல்வி மற்றும் உயர்நிலைக்கல்வி பயின்று வரும் மாணாக்கர்களுக்கு அனுபவ ரீதியாக இணையதளம் வாயிலாக கற்றல் திறன்களும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. வேலைக்கு செல்வதற்கு முன்னதாகவே தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்வதற்கு மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாக இத்திட்டம் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் நோக்கம், சாத்தியமான பயிற்சி வழங்குநர்களைக் கண்டறிந்து தற்போதைய தொழில்துறை இடைவெளிகளின் அடிப்படையில் பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்குவதாகும்.இந்த முதன்மைத் திட்டத்தின் மூலம், மாணவர்கள் பயிற்சி பெறவும், அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலை கிடைப்பதை உறுதி செய்யவும் முடியும். மாநில கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு தொழில் மற்றும் கல்வி வழிகாட்டுதலையும் உறுதி செய்திடவும் இத்திட்டம் அடிப்படையாக அமைகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 34 பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த சுமார் 31,317 மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை முறையாக கற்றுக்கொண்டு தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்பங்களை முழுமையாக அறிந்துகொண்டு வேலைவாய்ப்புக்களின்போது மாணாக்கர்களின் தனித்திறன்களை இதன் மூலம் வெளிக்கொணர்வதற்கும் தயார்படுத்திக்கொள்வதற்கும் இத்திட்டம் அடிப்படையாக அமைகிறது.இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவி எஸ்.சரண்யா தெரிவித்ததாவது : இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் கும்மிடிப்பூண்டி தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் 3-ம் ஆண்டு பயின்று வருகிறேன். எனது கல்லூரி படிப்புடன் எதிர்கால தேவைக்கு பயனுள்ள வகையில் எனது படிப்பு சார்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய கூடுதல் படிப்புகளையும் படிப்பதற்கு ஆர்வம் காட்டினேன். ஆனால், கல்லூரி நேரம் முடிந்தவுடன், கூடுதல் படிப்பு படிப்பதற்கான போதுமான நேரம் கிடைக்கவில்லை. அதனை பூர்த்தி செய்கின்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் “நான் முதல்வன்” என்ற திட்டத்தினை அறிவித்து, அத்திட்டம் மூலம் எங்களது எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கின்ற வகையில் இத்திட்டத்தை மேற்கொண்டுள்ளார்.இதில் நான் பிக் டேட்டா தேர்ந்தெடுத்துள்ளேன். நாங்கள் விரும்புகின்ற தொழில் பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிப்பதற்கும், அதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் இப்பயிற்சி வகுப்பில் கற்பிக்கின்றனர். எங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளன. நாங்கள் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களும் தொழில் நிறுவனங்கள் வாயிலாக வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனைத்து மாணாக்கர்களின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என எஸ்.சரண்யா கூறினார்.அதே போல் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் திருத்தணி தனியார் பொறியியல் கல்லூரியைச் சார்ந்த மாணவர் மு.தினேஷ் கூறுகையில்,நான் திருத்தணி தனியார் பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பிரிவில்; கணினி அறிவியல் 3-ம் ஆண்டு பயின்று வருகிறேன். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் நாங்கள் தற்பொழுது பயின்று வரும் கல்லூரி படிப்பையும் சேர்த்து கூடுதலாக தொழில்நுட்பம் சார்ந்த எங்களது எதிர்காலத்திற்கு தேவையான விர்ச்சுவல் ரியாலிட்டி டெவலப்மென்ட் படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.அப்படிப்பட்ட கூடுதல் தொழி நுட்பம் சார்ந்த படிப்புகளை படிப்பதற்கென தனியாக நேரம் ஒதுக்கி படிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக அரசின் சார்பில் நான் முதல்வன் என்ற திட்டத்தை செயல்படுத்தி, எங்களுக்கு எதிர்கால வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார்.இத்திட்டத்தின் மூலம் எங்களது ஆர்வத்தின் அடிப்படையில் தேவையான தொழில்நுட்ப பிரிவுகளை தேர்ந்தெடுத்து பயிலலாம். நான் விர்ச்சுவல் ரியாலிட்டி டெவலப்மென்ட் தேர்ந்தெடுத்து பயின்று வருகிறேன். இப்பயிற்சியில் நாங்கள் பயின்று வருவது தொடர்பாக தேர்வுகளும் அவ்வபோது வைக்கின்றனர். அதன் மூலம் நாங்கள் கூடுதலாக பயில்வதற்கும் ஊக்குவிக்கிறது. பயிற்சியின் கால இறுதியில் தொழில் நிறுவனங்களின் சார்பில் நாங்கள் பயின்றதற்கான பாடப்பிரிவின் சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.இவ்வகையான வாய்ப்புக்களை நாங்கள் பயின்று வரும் கல்வி நிறுவனங்களின் வாயிலாகவே கற்பதற்கான வழிவகைகளை உருவாக்கி தந்து, தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை செயல்படுத்தி எங்களுக்கான முதலமைச்சராக திகழ்ந்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.இவ்வாறு மாணவ, மாணவியர்கள் கல்வி கற்பதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.