மாவட்டத் தலைவர் வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் மற்றும் மனு கொடுப்போர் இயக்கம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் எதிரில் மாவட்டத் தலைவர் வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்த போது; தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக தமிழக அரசு அறிவித்துள்ள ந.க.எண். 8575/மாதிரு2/2022, நாள்: 17:11-2022 அரசாணை (நிலை) எண். 541 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நில முடிவு அலகு (நி.மு.1(2). நாள்: 11.11.2022 மற்றும் அரசாணை (நிலை) எண்.24, மாற்றுத்திறனாளிகள் நல (மாதிந-31)த்துறை நாள்: 12.08.2022ன்டி முதலமைச்சர் அவர்கள் அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் சமூக பாதுகாப்பிற்கும், தேவையான பல மறுவாழ்வு திட்டங்களை, பல்வேறு துறைகளுடன் இணைந்து வழங்கி வருகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலமாக இலவச வீடு, இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு தாங்கள் தலையீடு செய்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனதில் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.